வேற்றுமைகளை களைந்து வெற்றிக்காக ஒன்றிணைவோம்;இஸ்மாயில் வலியுறுத்தல்

15ஆவது பொதுத் தேர்தலில் பாரிசான் நேஷனல் (பிஎன்) உறுப்பினர்கள் தங்கள் கூட்டணி அமோக வெற்றியைப்பெற வேறுபாடுகளை ஒதுக்கி வைக்குமாறு இடைக்கால  பிரதமர் டத்தோஸ்ரீ  இஸ்மாயில் சப்ரி யாக்கோப் அழைப்பு விடுத்தார்.

அம்னோ துணைத் தலைவர், தேர்தல்களின் போது நாடாளுமன்றத் தொகுதிகளில் உட்கட்சி பூசல் ஏற்படுவது சகஜம், ஆனால் கட்சி வெற்றிபெற உதவுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றார். சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற பகுதிகளில் சில பிரச்சனைகளை எதிர்கொள்வதை நான் கேள்விப்பட்டேன். இது மாநிலத் தேர்தல்கள், இடைத்தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்களின் போது கூட பொதுவானது. .

பிஎன் கட்சி உறுப்பினர்களாக  கட்சிக்கு வெற்றியைத் தேடித் தருவதே நமது பொறுப்பு. எனவே, அனைத்து வேறுபாடுகளையும் பிரச்சனைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு கட்சியின் வெற்றியில் கவனம் செலுத்துவது சிறந்தது  என்று கூறினார்.

 GE15இல்  தொகுதி வழங்கப்படாததால் அதிருப்தி அடைந்த சில முன்னாள் அம்னோ உறுப்பினர்கள் பற்றி கருத்து கேட்கப்பட்டது .அதற்கு  கட்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்றும் ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதியிலும் வேட்பாளர்களாகத் தகுதியுடைய பலர் இருந்தாலும், அனைவரும் போட்டியிட முடியாது. ஒரு நபர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் அவர் கூறினார்.

நாளை வேட்புமனு தாக்கல் செய்யும் போது கட்சி ஆதரவாளர்கள் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்றும், எந்தவித ஆத்திரமூட்டல் இன்றி செயல்முறை சீராக நடைபெறுவதை உறுதி செய்யவும் இஸ்மாயில் சப்ரி நினைவூட்டினார்.

நாம் ஒருவரையொருவர் மதிக்க வேண்டும் மற்றும் அனைத்து கட்சி வேட்பாளர்களும் வாக்காளர்களுக்கு தங்கள் சேவைகளை வழங்க சம வாய்ப்பு உள்ளது. நாளை நாடு முழுவதும் அமைதியான முறையில் வேட்புமனு தாக்கல் செய்வதை உறுதிபடுத்துவோம் என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here