15வது பொதுத் தேர்தல் : பூலாயில் தீபக்கிற்கு பதிலாக லோ கா யோங்கை நிறுத்தியது பெரிக்காத்தான் நேஷனல்

ஜோகூர் பாரு, நவம்பர் 4 :

ஜோகூரின் பூலாய் நாடாளுமன்றத் தொகுதியில் கடைசி நிமிட மாறுதலை பெரிக்காத்தான் நேஷனல் மேற்கொண்டுள்ளது, அதாவது அத்தொகுதியில் போட்டியிடுவார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த J.R.தீபக் ஜெய்கிஷனுக்குப் பதிலாக, தெப்ராவ் கெராக்கான் பிரிவுத் தலைவர் லோ கா யோங்கை அக்கட்சி நிறுத்தியுள்ளது.

தீபக் மாற்றப்படுவார் என்ற பேச்சை மாநில பெரிக்காத்தான் தேர்தல் இயக்குனர் ரஸ்மான் இத்னைன் மறுத்த சில மணி நேரங்களிலேயே, இந்த மாற்றம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

இன்று வெள்ளிக்கிழமை (நவம்பர் 4) தொடர்பு கொண்டபோது, ​​லோஹ் 15வது பொதுத் தேர்தலில் (GE15) போட்டியிடப் போவதை உறுதிப்படுத்தினார்.

பெரிக்காத்தான் நேஷனலின் மத்திய தலைமையின் ஆலோசனைக்குப் பிறகு நேற்று (நவம்பர் 3) இந்த முடிவு எடுக்கப்பட்டது.

கடந்த மார்ச் மாதம் நடந்த மாநிலத் தேர்தலின் போது, லோ புத்திரி வங்சா தொகுதியில் போட்டியிட்டார் ஆனால் அப்பகுதியில் மூடாவின் அமிரா ஐஸ்யா அப்துல் அஜீஸிடம் தோற்றார் என்பது நினைவுகூரத்தக்கது.

“தீபக்கின் வேட்புமனு பற்றி எங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை, ஏனெனில் அனைத்து விஷயங்களும் பெரிக்காத்தான் மத்திய தலைமையால் அறிவிப்பதற்கு முன்பே முடிவு செய்யப்பட்டது,” என்று அவர் கூறினார்.

கம்பள வியாபாரம் செய்யும் தீபக், முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் மற்றும் அவரது மனைவி டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோர் இருவரும் மங்கோலிய அழகியான அல்தான்துயா ஷாரிபுவின் கொலையில் ஈடுபட்டதாக கூறி சர்ச்சை ஏற்படுத்தியதன் மூலம் , உள்ளூர் அரசியலில் நன்கு அறியப்பட்ட நபராக இருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here