சுங்கை சிப்புட்டில் கட்சியின் சுவரொட்டிகள், பதாகைகள் காணாமல் போனது தொடர்பில் விசாரணை ஆரம்பம் – புக்கிட் அமான் தகவல்

கோலாலம்பூர், நவம்பர் 5 :

பேராக்கின் சுங்கை சிப்புட்டில் அரசியல் கட்சியின் சுவரொட்டிகள் மற்றும் பதாகைகள் காணாமல் போனது தொடர்பான புகாரை காவல்துறை பெற்றதைத் தொடந்து, அது தொடர்பான விசாரணைகள் நேற்று தொடங்கியதாக புக்கிட் அமான் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு துறை இயக்குனர், டத்தோஸ்ரீ ஹசானி கசாலி தெரிவித்தார்.

இந்த குற்றச்செயல் தேசத்துரோகச் செயல்களில் ஈடுபட்டதற்காக தண்டனைச் சட்டம் பிரிவு 427ன் கீழ் விசாரிக்கப்படுகிறது என்றார்.

15வது பொதுத் தேர்தலுக்கான (GE15) PDRM செயல்பாட்டு இயக்குநராகவும் இருக்கும் ஹசானி, இந்த வழக்கு தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் கூறினார்.

இது தவிர, கட்சி கூட்டங்களை நடத்துவதற்கு இதுவரை 15 அனுமதிகளை போலீசார் வழங்கியுள்ளனர். அதில் நெகிரி செம்பிலானில் எட்டு, திரெங்கானுவில் மூன்று , பெர்லிஸில் இரண்டு, மற்றும் கிளாந்தான் மற்றும் சிலாங்கூரில் தலா ஒன்றும் அடங்கும் ,” என்று அவர் இன்று தொடர்பு கொண்டபோது கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here