பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்றத் தொகுதியில் ஆறு முனைப் போட்டி

பெட்டாலிங் ஜெயா, நவம்பர் 5 :

வரும் 15வது பொதுத் தேர்தலில் (GE15) பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்றத் தொகுதிக்கான போட்டியில் நான்கு புதிய முகங்கள் மற்றும் இரண்டு அரசியல் ஜாம்பவான்கள் இணைந்து மொத்தமாக ஆறு பேர் தேர்தல் களத்தில் குதித்துள்ளனர்.

இரண்டு மூத்த அரசியல்வாதிகளில் முதன்மையானவர் – MCA இன் செவ் ஹியான் தாட் – இவர் 14வது பொதுத் தேர்தலில் போட்டியிட்டு, தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்றயவர் PKR இன் லீ சீன் சுங் ஆவார், இவர் இரண்டு முறை செமாம்பு, பகாங் ஆகிய தொகுதிகளில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.

பார்ட்டி ராக்யாட் மலேசியாவின் டத்தோ எசாம் முகமட் நோர் மற்றும் பெஜுவாங்கின் மஸ்வீன் மொக்தார் ஆகியோருடன் பெர்சாத்துவின் டத்தோ தேங் பூக் மற்றும் இரண்டு வேட்பாளர்களும் பெட்டாலிங் ஜெயாவின் போட்டியிடுகின்றனர்.

இவர்கள் தவிர ஓய்வு பெற்ற அரசு ஊழியர் கே.ஜே. ஜான் ஜோன் குருவில்லா இத்தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here