15வது பொதுத் தேர்தலில் சகோதரர் அஸ்மின் அலியை எதிர்த்துப் போட்டியிடாது அஸ்வான் அலி விலகினார்

கோம்பாக், நவம்பர் 5 :

15வது பொதுத் தேர்தலில் கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியில் தனது சகோதரர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலியை எதிர்த்துப் போட்டியிடுவதில்லை என அவரது சகோதரர் சர்ச்சைக்குரிய அஸ்வான் அலி முடிவு செய்துள்ளார்.

திவா ஏஏ என்று அழைக்கப்படும் அவர் ஒரு தொலைக்காட்சி தொகுப்பாளர், தனது மறைந்த தாயாரை கனவில் கண்ட பிறகு, தான் இந்த முடிவை எடுத்ததாகக் கூறினார், கனவில் தனது தாயார் அவரை போட்டியிட வேண்டாம் என்று அறிவுறுத்தியதாலேயே அவர் போட்டியிடாது விலகியதாகவும், மாறாக வேட்பாளர்கள் போட்டியிட RM10,000 செலுத்த வேண்டும் என்பதால், பணப் பற்றாக்குறையால் தான் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று கூறப்படும் கருத்தை அவர் மறுத்தார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த அந்நாட்டின் 14வது பொதுத் தேர்தலில் அஸ்மினிடம் புக்கிட் அந்தரபங்சா மாநிலத் தொகுதிக்கான பலமுனைப் போட்டியில் ஏற்கனவே தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

15வது பொதுத் தேர்தலுக்கான வேட்ப்பாளர் போட்டியிலிருந்து விலகிய அஸ்வான் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரிக்கு தனது ஆதரவை தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here