குவா மூசாங்கில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் 40 வீடுகள் பாதிப்பு

குவா மூசாங், நவம்பர் 7 :

நேற்று முதல் பெய்த கனமழையைத் தொடர்ந்து, இங்குள்ள குவா மூசாங்கின்  RKT ஜெராம் தேகோவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் மொத்தம் 40 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

குடியிருப்புவாசிகளின் கூற்றுப்படி, இரவு 7 மணியளவில் மழை பெய்யத் தொடங்கியது, சுங்கை செவேயின் நீர்மட்டம் நேற்று இரவு 12.30 மணியளவில் உயரத் தொடங்கியது.

ஒரு குடியிருப்பாளரான சித்தி ஆயிஷா இப்ராஹிம், 25, கூறுகையில் தண்ணீர் கடை கடவென அதிகரித்து 40 நிமிடங்களுக்கு வீட்டிற்குள் நுழைந்ததால் எங்களுக்கு எந்த பொருட்களையும் எடுத்துக்கொள்ள நேரம் இல்லை என்று கூறினார்.

“தண்ணீர் முழங்கால் அளவுக்கு வந்ததால் நானும் எனது குடும்பத்தினரும் ஒரு இரவு முழுதும் தூங்கவில்லை.

“தண்ணீர் வடிந்தவுடன், வீட்டிற்குள் இருந்த சேற்றை சுத்தம் செய்யும் பணியில் நாங்கள் தொடர்ந்து பணியாற்றினோம்,” என்று அவர் இன்று RKT Jeram Tekoh இல் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறினார்.

மற்றொரு குடியிருப்பாளரான 62 வயதான முகமட் கசாலி பெடோல் கூறுகையில், 2014 ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரிய வெள்ளத்திற்குப் பிறகு ஒவ்வொரு ஆண்டும் RKT ஜெராம் தேகோ திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்படுகிறது.

இதற்கு சுங்கை செவே ஆழமற்றதாக இருப்பதாலும், அதில் அதிக மழைநீரைத் தேக்கிவைக்க முடியாததாலும் இந்த நிலைமை ஏற்பட்டதாக நம்பப்படுகிறது என்றார்.

“அதிகாரிகள், குறிப்பாக நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் திணைக்களம் (ஜேபிஎஸ்), சுங்கை செவேயை ஆழப்படுத்த முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.

“அவ்வாறு செய்தால், நாம் சொத்து சேதத்தால் அடிக்கடி இழப்பை சந்திக்கும் நிலை ஏற்படாது,” என்று அவர் கூறினார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here