தியான் சுவா: நான் அஸ்மினின் கோஷ்டியில் இருந்தேன் என்று சொல்வது நியாயமற்றது

பிகேஆர் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி கட்சியில் இருந்தபோது அவர் அணியில் இருந்ததில்லை என்று தியான் சுவா மறுத்துள்ளார். சுவாவின் கூற்றுப்படி, 2018 ஆம் ஆண்டு கட்சித் தேர்தலின் போது, பிகேஆர் துணைத் தலைவரான அஸ்மினின் பிரச்சாரத்தை அவர் ஆதரித்தது மட்டுமே என்றார்.

அஸ்மின் அதற்கு முன் சிலாங்கூர் மந்திரி பெசாராக இருந்தார். அவர் ஏற்கெனவே பிகேஆர் துணைத் தலைவராக இருந்தார். நாங்கள் கூட்டாட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியிருந்தோம். கட்சிக்கு ஸ்திரத்தன்மை தேவை என்பதால் நான் அவருக்கு ஆதரவு வழங்கினேன் என்றார்.

எனவே நான் அவருக்கு ஆதரவாக இருப்பேன் என்று உறுதியாகக் கூறினேன். அது தான் உண்மை. அதை நான் மறுக்க மாட்டேன். ஆனால் அதன் காரணமாக மக்கள் என்னை அஸ்மினின் பிரிவு என்று முத்திரை குத்துவது மிகவும் நியாயமற்றது என்று நான் நினைக்கிறேன். நான் அஸ்மினின் கோஷ்டியின் ஒரு பகுதியாக ஒருபோதும் கருதப்படவில்லை. அஸ்மினுக்கும் அது தெரியும் என்று அவர் கூறியதாக தி வைப்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here