கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் 10 லட்சம் வெள்ளி மதிப்புள்ள பறவைகள் கடத்தல் முறியடிப்பு

புத்ராஜெயா, நவம்பர் 8:

நினைவு பரிசு வகைகள் போன்ற போர்வையில் பெட்டிகளில் அடைத்து, ஹாங்காங்கின் கறுப்புச் சந்தையில் விற்க முயற்சியில் கடத்தப்பட்ட கிட்டத்தட்ட 10 லட்சம் வெள்ளி மதிப்பிலான பறவைகள், வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசிய பூங்காக்கள் (Perhilitan) திணைக்களத்தின் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் விரைவான நடவடிக்கையால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டன.

வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசிய பூங்காக்கள் நிறுவனத்தின் இயக்குநர் ஜெனரல், டத்தோ அப்துல் காதிர் அபு ஹாஷிம் கூறுகையில், Bersepadu Khazanah (OBK) நடவடிக்கை மூலம் இந்த வனவிலங்குகள் பறிமுதல் செய்யப்பட்டது என்றார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், KLIA அலுவலகத்திற்கு சந்தேகத்திற்கிடமான பொட்டலங்கள் பற்றிய தகவல் கிடைத்ததை அடுத்து, KLIA சரக்கு அஞ்சல் பிரிவினால் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

“ஏற்றுமதி ஆவணங்கள் இல்லாத பல பொட்டலங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகளில், அதில் கூண்டுகளுக்குள் பாதுகாக்கப்பட்ட காட்டுப் பறவைகள் இருப்பது கண்டறியப்பட்டது.

“மேலும் ஆய்வு செய்ததில் ஐந்து Victoria’s crown birds, பதினெட்டு paradise birds, இரு leaf-crows and ஒரு white crow ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன,” என்று அவர் கூறினார்.

விசாரணையின் அடிப்படையில், பறிமுதல் செய்யப்பட்ட அனைத்தும் பறவைகளும் இந்தோனேசியாவிலிருந்து வந்ததாகவும், அவை ஹாங்காங்கிற்கு கடத்தப்படவிருந்தாகவும் கூறினார்.

இது தொடர்பில் KLIA காவல் நிலையத்தில் காவல்துறையில் புகாரளிக்கப்பட்டுள்ளது மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் 2010 (சட்டம் 716) இன் படி வழக்கு விசாரிக்கப்பட்டது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here