15வது பொதுத்தேர்தல்: சபாவில் 369 கட்சி கூட்டங்கள் மற்றும் பிரச்சாரங்களுக்கு போலீஸ் அனுமதி

கோத்தா கினாபாலு, நவம்பர் 8 :

வரும் 15வது பொதுத் தேர்தலில் கட்சி கூட்டங்கள் மற்றும் பிரச்ச்சாரங்களை நடத்த அனுமதி கோரி, இதுவரை 369 விண்ணப்பங்களை சபா போலீசார் அங்கீகரித்துள்ளனர் என்று மாநில காவல்துறை ஆணையர் டத்தோ இட்ரிஸ் அப்துல்லா தெரிவித்தார்.

பிரச்சார காலத்தின் மூன்றாவது நாளான நேற்று மொத்தம் 178 அனுமதிகள் அங்கீகரிக்கப்பட்டதாகவும், இதுவரை நடத்தப்பட்ட கூட்டங்கள் அனைத்தும் பிரச்சார விதிகளுக்கு இணங்குவதாகவும் அவர் கூறினார்.

அக்டோபர் 26 முதல் நவம்பர் 7 வரை, GE15 தொடர்பான மொத்தம் 39 போலீஸ் புகார்களை போலீஸ் பெற்றுக்கொண்டது. அவற்றில் ஆறு புகார்கள் தொடர்பில் புலனாய்வு ஆவணங்கள் திறக்கப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அனைத்து அரசியல் கட்சிகளும் பிரச்சாரத்திற்குச் செல்வதற்கு முன் அனுமதிக்கு விண்ணப்பிக்கவும், ஆத்திரமூட்டல், அவதூறு மற்றும் இனவெறி ஆகியவை போன்ற பிரச்சார விதிகளுக்குக் கட்டுப்படவும், தங்கள் ஆதரவாளர்கள் தங்களைத் தாங்களே நடத்துவதை உறுதிப்படுத்தவும் வேண்டும் என்று இட்ரிஸ் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here