15வது பொதுத்தேர்தல் : வாக்குச்சாவடி மையம் மற்றும் கொடிகளை நாசப்படுத்தியது தொடர்பில் ஒருவர் கைது

கோலாலம்பூர், நவம்பர் 8 :

கூலிமின் Tapak Mahlus வாக்குச் சாவடி கூடாரத்தை எரித்தது மற்றும் தேசிய முன்னணி கட்சியின் கொடிகளை உடைத்தது தொடர்பில் போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர் என்று புக்கிட் அமானின் பொதுத் தேர்தல் நடவடிக்கை இயக்குநர், ஆணையர் டத்தோ ஹசானி கசாலி தெரிவித்துள்ளார்.

அந்த நபர் கொடிகளை உடைத்து சாக்கடையில் வீசியதாக கூறப்படுகிறது. அவர் தவறான விருப்பம் மற்றும் விரோத உணர்வுகளை ஊக்குவித்ததற்காக மேலதிக விசாரணைகளுக்கு உதவுவதற்காக விளக்கமறியலில் வைக்கப்படுவார் என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here