அறையின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் மூன்று மாணவர்கள் காயம்

ஜார்ஜ் டவுன்:  ஸ்காட்லாந்து சாலையில் இருக்கும் ஆதரவற்ற  குழந்தைகள் பராமரிப்பு இல்லத்தில் உள்ள ஒரு அறையின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் மூன்று மாணவர்கள் காயமடைந்தனர். சம்பவம் நடந்தபோது மாணவர்கள் தங்கள் அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர். அங்கு மொத்தம் 30 மாணவர்கள் இருந்ததாக தெரியவந்துள்ளது.

எட்டு வயது முதல் 13 வயதுக்குட்பட்ட மூன்று மாணவர்கள் மேலதிக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். 10 வயது  மற்றும் 13 வயதுடைய இரு மாணவர்களுக்கு முதுகில் காயங்கள்  ஏற்பட்டுள்ளன. எட்டு வயது மாணவியின் கையில் லேசான காயம் மட்டுமே ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் மேல் சிகிச்சைக்காக பினாங்கு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இந்த கட்டிடம் 1500 சதுர அடியில் 1984 ஆம் ஆன்டு கட்டப்பட்டது. தற்போது  கட்டிடம்  பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதால் மாணவர்கள் அனைவரும் குளுகோரில் உள்ள சீமியோ-ரெக்சம் கட்டிடத்திற்கு தற்காலிகமாக மாற்றப்படுவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here