” EPF-ஐ திரும்பப் பெறுவது, எதிர்காலத்திற்கான பெரிய ஆபத்து” என்கிறார் தெங்கு டத்தோஸ்ரீ ஜஃப்ருல் தெங்கு அப்துல் அஜீஸ்

பெட்டாலிங் ஜெயா, நவம்பர் 9 :

‘ஊழியர் சேமநிதி (EPF) சேமிப்பை குறிப்பிட்ட காலம் முடிய முன்னர், அவர்களை தாமாகவே சேமிப்பை திரும்பப் பெற அனுமதிப்பது, மக்களுக்கான நிலையான நீண்ட கால தீர்வாக இருக்காது’ என்று தெங்கு டத்தோஸ்ரீ ஜஃப்ருல் தெங்கு அப்துல் அஜீஸ் தெரிவித்தார்.

மக்கள் தங்களுடைய எதிர்காலச் சேமிப்பை நிகழ்கால செலவீனங்களுக்காக திரும்ப எடுப்பதற்கு கேட்காமல், வேறு வழிகளில் அரசாங்கம் மக்களுக்கு உதவ வேண்டும் என்று நடப்பு நிதியமைச்சருமான அவர் கூறினார்.

“EPF என்பது ஓய்வூதியம் போன்றது. இது அவர்கள் ஓய்வு பெறுவதற்கு முன்பு அவர்களின் சொந்த ஓய்வூதியத்தை எடுக்கச் சொல்வது போல் இருக்கும், ”என்று பெரிகாத்தான் நேஷனல் அளித்த தேர்தல் வாக்குறுதியைப் பற்றி கருத்து தெரிவிக்கும் போது, ​​அதாவது பெரிகாத்தான் நேஷனல் தேர்தலில் வெற்றி பெற்றால் மற்றொரு தடவை EPF -ஐ திரும்பப் பெறுவது பற்றி பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்திருப்பது தொடர்பில் அவர் இவ்வாறு கூறினார்.

“தங்கள் சொந்த சேமிப்பை திரும்பப் பெறச் சொல்வது அரசாங்கத்தின் சிறந்த தீர்வாகாது,” என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here