சுங்கை பூலோ தொகுதி: ஜாஹிடின் கூற்றுகளை மறுக்கிறார் கைரி

GE15வது பொதுத் தேர்தலுக்கான  சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியில் பாரிசான் நேஷனல் (பிஎன்) வேட்பாளராகத் தன்னை முன்னிறுத்துவதற்காக மஇகா தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரனைச் சந்தித்ததாக சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் ஒப்புக்கொண்டார்.    மூன்று முறை வென்ற ரெம்பாவ் தொகுதியை பிஎன் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் ஹசனுக்கு  விட்டுக் கொடுத்த பிறகு அவ்வாறு செய்ததாக கூறினார்.

தலைவர்களின்  அழைப்புக்காக காத்திருந்தேன் ஆனால் எதுவும் நடக்கவில்லை. ஒவ்வொரு  இடங்களாக  ஒதுக்கப்பட்டது.  இறுதியில் நான் சுங்கை பூலோவில் போட்டியிடுவது என்ற முடிவுக்கு வந்தேன்.

அம்னோ தலைவருடனான விவாதத்தை நான் நீட்டிக்க விரும்பவில்லை, ஏனென்றால் அது பற்றி ஊடகங்கள் மூலம் பேசுவது சரியல்ல. ஆனால் உண்மை என்னவென்றால், கட்சித் தலைமையிடமிருந்து  எந்த அழைப்பும்  வரவில்லை. வேட்புமனுத் தேதி நெருங்கி வருவதால், நான் ஏதாவது செய்ய வேண்டியிருந்தது.  அதனால் நோஹ்வுடன் விவாதிக்க நான் முன்முயற்சி எடுத்தேன்.அவர் என்னை சிலாங்கூருக்கு வர அழைப்புவிடுத்தார். அதற்குப் பிறகுதான் நான் மஇகா தலைவரைச் சந்தித்தேன் என்று கூறினார்.

கைரி பிரதமராவதற்கு தவறான கட்சியில்  உள்ளார் என்று பெரிகாத்தான் நேஷனல் (பிஎன்) தலைவர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின்  கூறியது பற்றி கேட்டதற்கு தன் திறமை மீது நம்பிக்கை இருப்பதாகவும் கோவிட்-19 நோய்த்தடுப்பு திட்டத்தை ஒருங்கிணைக்கும் பொறுப்பில் இருந்த போது சிறந்த அமைச்சராக  செயல்பட்டதையும் நினைவுகூர்ந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here