கோலாலம்பூர், நவம்பர் 10 :
நேற்று புதன்கிழமை (நவம்பர் 9) ஸ்ரீ ராம்பை LRT நிலையத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் ஒரு பெண்ணிடம் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர் என்றும் இந்த சம்பவம் நேற்று காலை 7 மணியளவில் நிகழ்ந்ததாகவும் வங்சா மாயூ மாவட்ட காவல்துறை துணைத் தலைவர் அஷாரி அபு சாமா தெரிவித்தார்.
25 வயதுடைய பெண் LRT நிலையத்திலிருந்து தேசா புத்ரா சந்தியை நோக்கி நடந்து கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவரை அணுகினர்.
“சந்தேக நபர்கள் கத்தியுடன் ஆயுதம் ஏந்திய நிலையில் அவரது பையை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். பாதிக்கப்பட்டவரால் மோட்டார் சைக்கிளையோ அதன் பதிவு எண்ணையோ அடையாளம் காண முடியவில்லை” என்று அவர் இன்று வியாழக்கிழமை (நவம்பர் 10) தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் தனது லேப்டாப் மற்றும் கைத்தொலைபேசியை இழந்ததாக அவர் கூறினார்.
குறித்த பெண் @soph_jes என்ற டூவிட்டர் கணக்கில் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து டுவீட் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.