பெட்டாலிங் ஜெயா, நவம்பர் 10 :
நவம்பர் 19-ம் தேதி நடைபெறும் 15வது பொதுத்தேர்தலின்போது, “வாக்குச் சாவடிகளுக்குள் கைத்தொலைபேசிகளை பயன்படுத்த அனுமதியில்லை” என்று தேர்தல் ஆணையம் (EC) தெரிவித்துள்ளது.
வாக்களிக்கும் செயல்முறையின்போது, “ஒவ்வொரு வாக்காளரும் வாக்குச்சாவடியில் தனது வாக்களிப்பு அட்டையை பெற்றுக்கொள்ளும்போது, தமது கைத்தொலைபேசியை அங்குள்ள தேர்தல் பணியாளரிடம் ஒப்படைக்கவேண்டும். பின்னர், வாக்களிப்பு முடிந்ததும் அவர் மீண்டும் குறித்த பணியாளரிடம் தனது கைத்தொலைபேசியை மீளவும் பெற்றுக்கொள்வார்” என்று தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் தேர்தல் ஆணையத்தின் சமூக ஊடக தளங்களில் பதிவேற்றப்பட்ட ஒரு விளக்கப்படத்தில், நவம்பர் 19 அன்று வாக்காளர்கள் வாக்களிக்கும்போது பின்பற்ற வேண்டிய 10 முக்கிய படிகளை தேர்தல் ஆணையம் பட்டியலிட்டுள்ளது.