800,000 க்கும் அதிகமான பயனார்களின் தரவுகள் திருட்டு

தேர்தல் ஆணையத்தின் (EC) MySPR அமைப்பிலிருந்து பெறப்பட்டதாகக் கூறப்படும் 800,000 க்கும் மேற்பட்ட பயனர்களின் தரவுகள்  அனைத்தும்  தரவுத்தள சந்தையில் RM9,300 க்கு விற்பனை செய்யப்படுகிறது என்று தொழில்நுட்ப வலைத்தளமான Lowyat.net தெரிவித்துள்ளது. அதில்  செல்ஃபிகள், MyKad விவரங்கள் மற்றும் முகவரிகள், மின்னஞ்சல் முகவரிகள், பிறந்த தேதிகள் போன்ற பிற விவரங்கள் இருப்பதாக தெரிகிறது.

2019 ஆம் ஆண்டில் புதிதாகத் தொடங்கப்பட்ட MySPR  இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் வாக்காளர்களாகப் பதிவு செய்துகொள்ளும் போது சேகரிக்கப்பட்ட தகவல்கள் இதில் உள்ளன. இந்த  தரவுத்தளத்தில் 1.6 மில்லியனுக்கும் அதிகமான KNOW YOUR CUSTOMER [eKYC] படங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.  மொத்த கோப்புகளின்  அளவு 67GB ஆகும்.

இந்த பட்டியல் MySPR ஆன்லைன் அமைப்பின் eKYC தரவை மட்டுமே மையமாகக் கொண்டிருந்தாலும், 22 மில்லியன் வாக்காளர்களின் விவரங்களுடன் முழு வாக்காளர் பட்டியலும் தங்களிடம் இருப்பதாக விற்பனையாளர் கூறியதாக  Lowyat.net தெரிவித்தது.

விற்பனையாளர் பிட்காயின் அல்லது மோனெரோ கிரிப்டோகரன்சிகளில் செலுத்துவதற்கு US$2,000 (RM9,284) கேட்டுள்ளார்.

தேசிய பதிவுத் துறையில் இருந்து (JPN) 22.5 மில்லியன் மலேசியர்களின் தரவுகள்  10,000 அமெரிக்க டாலர்களுக்கு (RM43,870) ஆன்லைனில் விற்கப்பட்டதாகக் கூறப்படும்  தகவல்களை உள்துறை அமைச்சர் ஹம்சா ஜைனுடின் முன்பு மறுத்திறுந்தார்.  JPN தரவுத்தளத்தில்  1940 முதல் 2004 க்கு இடையில் பிறந்தவர்களின் விவரங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

Lowyat.net அறிக்கை குறித்து கருத்து தெரிவிக்க தேர்தல் ஆணையம் மற்றும் காவல்துறையை அணுகியுள்ளோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here