PHயை சேர்ந்த ஆடவர் உத்தரவின் பேரில் கொடியை அகற்றினார்; காவல்துறை

கோலாலம்பூர்: தேசிய அருங்காட்சியகத்தின் முன் பக்காத்தான் ஹராப்பான் (PH) கொடியை அகற்றி வைரலான வீடியோவில் பதிவு செய்யப்பட்ட நபர் 15ஆவது பொதுத் தேர்தலுக்கான (GE15) PH கண்காணிப்பு முகவர் என்பதை போலீசார் உறுதிப்படுத்தினர்.

Lembah Pantai தேர்தல் பிரச்சார அமலாக்கக் குழுத் தலைவர் மற்றும் காவல்துறை பிரதிநிதி வழங்கிய அறிவுறுத்தலின் பேரில் அந்த நபரின் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக பிரிக்ஃபீல்ட்ஸ் மாவட்ட காவல்துறைத் தலைவர் ACP அமிஹிசாம் அப்துல் ஷுகோர் தெரிவித்தார்.

தேசிய அருங்காட்சியகத்தின் முன் வேலியை கொடி மறைத்திருந்ததால், லெம்பா பந்தை நாடாளுமன்ற வேட்பாளரின் பிரதிநிதியுடன் நடந்த கலந்துரையாடலின் பின்னர் இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

இதுபோன்ற பொறுப்பற்ற செயல்கள் பொது அமைதியை பாதிக்கும் என்பதால், எந்தவொரு வீடியோ அல்லது தகவலையும் முன்பே சரிபார்க்காமல் வைரல் செய்ய வேண்டாம் என்று காவல்துறை பொதுமக்களுக்கு நினைவூட்ட விரும்புகிறது என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

பிரச்சார காலம் முழுவதும் சட்டத்திற்கு முரணான எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டாம் என்றும் அமிஹிசாம் பொதுமக்களை எச்சரித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here