நாடு முழுவதும் மொத்தம் 2,269 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்

கோலாலம்பூர், நவம்பர் 13 :

நாட்டில் பருவ மழை ஆரம்பித்ததிலிருந்து நாட்டின் பல மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி, ஜோகூர், மலாக்கா, சிலாங்கூர், பேராக், பினாங்கு, கெடா மற்றும் கிளாந்தான் ஆகிய இடங்களில் மொத்தம் 656 குடும்பங்களை சேர்ந்த 2,269 வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (நட்மா) இன்று ஃபேஸ்புக்கில் பதிவேற்றிய ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சம்மந்தப்பட்ட ஏழு மாநிலங்களில் அதிகளவாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை கொண்ட மாநிலமாக கிளாந்தான் ( 951 பேர்) உள்ளது, அதைத் தொடர்ந்து சிலாங்கூர் (699 பேர்), பினாங்கு (236 பேர்), ஜோகூர் (221 பேர்), கெடா (112 பேர்), மலாக்கா (40 பேர்) மற்றும் பேராக்கில் (10 பேர்) என பதிவாகியுள்ளது.

“மொத்தமமாக 26 வெள்ள நிவாரண மையங்கள் இன்னும் செயலில் உள்ளன, அதே நேரத்தில் ஒரு வெளியேற்ற மையம் இன்று காலை 8 மணிக்கு மூடப்பட்டுள்ளது,” என்று அந்த அறிக்கையில் நட்மா தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here