“பிளாக் கோக்கோயின் (black cocaine)’’ என்ற ஆபத்தான போதைப்பொருள் அடங்கிய பொருட்களுடன் தென் அமெரிக்க சுற்றுலாப் பயணி கைது

சிரம்பான், நவம்பர் 14 :

மலேசியாவில் விற்பனை செய்யும் நோக்கத்திற்காக, RM1.34 மில்லியன் மதிப்புள்ள ஆபத்தான போதைப்பொருட்களில் ஒன்றான ‘பிளாக் கோக்கோயின் (black cocaine)‘ துண்டுகள் அடங்கிய பொருட்களை தந்து இரண்டு பயணப் பொதிகளில் வைத்திருந்த தென் அமெரிக்காவைச் சேர்ந்த பெண் சுற்றுலாப்பயணி ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அனைத்துலக போதைப்பொருள் கும்பலால் வழிநடத்தப்பட்ட சந்தேக நபரின் தகவலின் அடிப்படையில், சந்தேக நபர் கடந்த நவம்பர் 6 ஆம் தேதி மாலை 4 மணிக்கு கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் (KLIA) கைது செய்யப்பட்டதாக சுங்கத்துறை துணை இயக்குநர் ஜெனரல் சசாலி முகமட் தெரிவித்தார்.

இந்தக்கும்பல் வழக்கமான கோகோயினை மற்ற இரசாயனங்களுடன் கலந்து மோல்ட் இன்ஜெக்ஷன் உத்தியைப் பயன்படுத்தி, கருப்பு ரப்பரைத் தயாரிகின்றனர். மேலும் அதனை அதிகாரிகளிடமிருந்து மறைக்க லக்கேஜ் லைனராகப் பயன்படுத்துகின்றனர் என்றும் “சந்தேக நபர் கொண்டு சென்ற இரண்டு லக்கேஜ் பைகளை உன்னிப்பாக ஆய்வு செய்ததில், லக்கேஜ் பைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கருப்பு ரப்பர் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன” என்று இன்று ரோயல் மலேசியன் சுங்கத் துறையின் போதைப்பொருள் பிரிவில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.

சசாலியின் கூற்றுப்படி, சந்தேகத்திற்குரிய கருப்பு ரப்பர் துண்டுகளின் உள்ளடக்கங்களில் 6.7 கிலோகிராம் நிறையுள்ள RM1.34 மில்லியன் மதிப்புள்ள மொத்த எடை கொண்ட ‘பிளாக் கோகோயின்’ போதைப்பொருள் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

“இந்த இரசாயனப் பாகங்களின் கலவையானது, கோகோயின் வகை மருந்துகளின் வாசனையை நடுநிலையாக்குவதுடன், மோப்ப நாய்களால் போதைப்பொருளின் வாசனையை கண்டறிய முடியாது என்பதை உறுதிப்படுத்துகிறது.

“இந்த செயல்முறை மலேசியாவிற்குள் கொண்டு வரப்படுவது முதல் முறையாகும் என்றும் கைது செய்யப்பட்ட 39 வயதான சந்தேக நபர் முதல் முறையாக மலேசியாவிற்குள் நுழைந்ததாகவும், அவர் விசாரணைக்கு உதவுவதற்காக 11 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்றும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here