GE15: ஊடகங்களுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது என்கிறார் ஜாஹிடி

பாடாங்  பெசார்: 15ஆவது பொதுத் தேர்தலை (GE15) செய்தியாக்க உள்ளூர் ஊடகங்களுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் உண்மையான செய்திகளை மட்டுமே தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று துணைத் தொடர்பு மற்றும் மல்டிமீடியா அமைச்சர் டத்தோ ஜாஹிடி ஜைனுல் அபிடின் கூறினார்.

நாங்கள் (K-KOMM) நீண்டகாலமாக ஒரு திறந்த கொள்கையை கடைப்பிடித்து வருகிறோம். அரசாங்கத்துடன் தொடர்புடைய ஊடகங்களுக்கு மட்டுமல்ல. மற்ற ஊடகங்களுக்கும் சுதந்திரம் வழங்கப்படுகிறது என்று அவர் பெர்னாமாவிடம் இன்று கூறினார்.

படாங் பெசார் நாடாளுமன்றத் தொகுதி மற்றும் Titi Tinggi  மாநிலத் தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் ஜாஹிடி, இந்த நாட்டில் பல இன சமூகங்களுக்கு இடையே மோதலை ஏற்படுத்தக்கூடிய இன உணர்வுப் பிரச்னைகள் தொடர்பான விஷயங்களைத் தொடாமல் ஊடகங்கள் வெளியிடும் செய்திகள் வெளிப்படையாகவும் உண்மையாகவும் இருக்க வேண்டும் என்றார்.

ஊடகங்களுக்கு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது; பரப்பப்படும் செய்தி சரியானது மற்றும் உண்மையாக இருக்க வேண்டும் என்று மட்டுமே நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என்று அவர் கூறினார். இதுவரை GE15 முழுவதும் வெளியான செய்தி அறிக்கைகள் சமநிலையில் இருப்பதைக் கண்டதாக ஜாஹிடி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here