அம்னோ தலைவர் ஜாஹிட்டின் காரணமாக மலாய்க்காரர்கள் தேசிய முன்னணியை நிராகரிக்கின்றனர் – ஹம்சா ஜைனுடின்

பெட்டாலிங் ஜெயா, நவம்பர் 15 :

எதிர்வரும் நவம்பர் 19ஆம் தேதி நடைபெறவுள்ள நாட்டின் 15வது பொதுத்தேர்தலில், அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அஹமட் ஜாஹிட் ஹமிடியின் காரணமாக பெரும்பான்மையான மலாய்க்காரர்கள் தேசிய முன்னணியை (BN ) நிராகரிக்க முடிவு செய்துள்ளதாக டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் இன்று தெரிவித்தார்.

இந்த தேர்தலில் தேசிய முன்னணிக்கு வாக்களித்தால், அடுத்த ஐந்தாண்டுகளுக்கு தேசத்தை வழிநடத்தும் உயர் பதவியை யார் வகிப்பார்கள் என்பதில் வாக்காளர்கள் அக்கறை கொண்டிருப்பதாகவும், மலேசியாவின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் ஒருவரை ஆதரிக்க மாட்டார்கள் என்றும்  அவர் மேலும் கூறினார்.

“பல மலாய்க்காரர்கள் BNக்கு வாக்களித்தால், நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் அதிகாரத்தை ஜாஹிட்டுக்கு கொடுத்ததற்கு சமமாக இருக்கும் என எண்ணுவதோடு பெரும்பான்மையான மக்கள் அவ்வாறு நடப்பதை விரும்பவில்லை”.

“இந்தத் தேர்தலில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், நாட்டிற்கு ஒழுக்கம் உள்ள மற்றும் தலைமை தாங்கக்கூடிய ஒருவரைத் தேர்ந்தெடுப்பது எவ்வாறு வ்ன்பதை மக்கள் நன்றாக அறிந்திருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன்,” என்று ஹம்சா கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here