ரஃபிஸி நிறுவிய Invoke Solutions அலுவலகத்தில் MACC சோதனை; ஊழியர்களிடம் 7 மணி நேரம் விசாரணை

கெஅடிலான் துணைத் தலைவர் ரஃபிஸி ரம்லியால் நிறுவப்பட்ட  Invoke Solutions Sdn Bhd என்ற தரவு நிறுவனத்தில் நேற்று இரவு மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் (எம்ஏசிசி) சோதனை நடத்தியதாக பெரித்தா ஹரியான் தெரிவித்துள்ளது. அறிக்கையின்படி, ரஃபிஸி தனது சொத்துப் பிரகடனம் தொடர்பாக தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று தனக்கு எதிராக புகார் அளித்ததையடுத்து இந்த சோதனை நடந்ததாகவும், அவருடைய ஊழியர்கள் ஏழு மணி நேரம் வரை விசாரிக்கப்பட்டதாகவும் கூறினார்.

ரஃபிஸி தனக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் கேள்வி எழுப்பினார். மேலும் தன்னிடம் ஆதாரம் இருக்கும் போதிலும் Wangsa Majuவில் இருக்கும் Mega Ayuh Malaysia, Kita Boleh  ஆகிய நிறுவனங்களிடம் கடலோர போர்க் கப்பல் (LCS) ஊழல் மற்றும் RM2 பில்லியன் மதிப்புள்ள வெள்ளம் தணிப்புத் திட்டம் ஆகியவற்றை அவர் வெளிப்படுத்தியதை MACC விசாரிக்கவில்லை என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here