வீட்டின் அருகே இறந்து கிடந்த ஆடவர்; அண்டைவீட்டுக்காரர் அதிர்ச்சி

ஈப்போ, நவம்பர் 16 :

நேற்றுக் காலை 11.30 மணியளவில், இங்கு கெமோரிலுள்ள கம்போங் சிக் ஜைனாலில் உள்ள ஒரு வீட்டின் அருகே 40 வயது நபர் ஒருவர் இறந்து கிடக்க, அவரது அண்டை வீட்டுக்காரரால் கண்டுபிடிக்கப்பட்டார்.

பேராக் காவல்துறைத் தலைவர், ஆணையர் டத்தோ முகமட் யூஸ்ரி ஹாசன் பஸ்ரி கூறுகையில், குறித்த சம்பவம் தொடர்பில் நேற்றுக் காலை 11.50 மணியளவில் எங்களுக்கு அழைப்பு வந்தது என்று கூறினார்.

உடனே அவ்விடத்த்திற்கு விரைந்த போலீசார் அந்த (இறந்த) நபரை மீட்டு, ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையின் தடயவியல் பிரிவுக்கு சோதனைக்காக அனுப்பி வைத்தனர், தடவியல் குழு அந்த ஆடவர் சுமார் 12 மணி நேரத்திற்கு முன்பே இறந்திருக்கலாம் என்றும் அவரது முகம் மற்றும் உடலில் காயங்களையும் கண்டறிந்தது,” என்றும் அவர் கூறினார்.

பிரேத பரிசோதனை அறிக்கை நிலுவையில் இருக்கும் நிலையில், இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்படும் என்று முகமட் யூஸ்ரி கூறினார்.

“இந்த வழக்கு தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள், காவல்துறையின் மூத்த விசாரணை அதிகாரி ஃபாட்லி அகமட்டை 019-250 0019 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்,” என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here