சிந்தித்து வாக்களியுங்கள் : நிக்கோல் வோங் வேண்டுகோள்

வாக்காளர்கள் தங்கள் வாழ்நாளில் அடுத்த ஐந்தாண்டுகளுக்கான   தேவையை பூர்த்தி செய்யும் வகையில் செயல்படும் அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்க   கவனமாகவும், புத்திசாலித்தனமாகவும் சிந்தித்து  வாக்களிக்க வேண்டும் என்று MCA இளைஞர் தலைவர் நிக்கோல் வோங் கூறுகிறார்

பிரச்சாரத்திற்கான நேரம் முடிவடையும் தருவாயில் இருப்பதால்   வாக்காளர்கள்  திறந்த மனதுடன் சிந்தித்து செயலாற்ற வேண்டும்  என்றார்.  அடுத்த ஐந்து ஆண்டுகளில் உங்கள் வாழ்க்கை சிறப்பாக அமைய எங்களுக்கு வாக்களியுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

பக்காத்தான் ஹராப்பானின் ஜிம்மி புவா மற்றும் பெரிகாத்தான் நேஷனலின் முகமட் இசா முகமட் பாசீர்    மற்றும்  வோங்  ஆகியோருக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது ,    வோங்  அந்தத் தொகுதியின் எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையே இணைப்பாக இருக்க விரும்புவதாகவும் கூறினார்.

தான் வெற்றி பெற்றால், ஒரு எம்.பி.யாக தனக்கு ஒதுக்கப்படும் நிதியில் ஒரு பகுதியை  அறக்கட்டளை  அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் வோங் குறிப்பிட்டார். அறக்கட்டளையின் உதவியைப் பெற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அல்லது சமூகம் விண்ணப்பிக்கலாம் என்றும்  அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here