கூலாய் பகுதியில் மழையுடன் கூடிய கடும் புயல்; 17 வீடுகள் மற்றும் 3 கடைகள் சேதமடைந்தன

கூலாய், நவம்பர் 19 :

ஃபெல்டா புக்கிட் பெர்மாய் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், இன்று பெய்த கனமழை மற்றும் பலத்த காற்றினால் 17 வீடுகள் மற்றும் 3 கடைகள் சேதமடைந்தன என்று, ஜோகூர் வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சிக் குழுத் தலைவர், டத்தோ முகமட் ஜஃப்னி முகமட் ஷுகோர் தெரிவித்தார்.

இன்று காலை 8 மணியளவில் நடந்த சம்பவத்துடன் சேர்த்து இந்த ஆண்டில் மட்டும் இவ்வாறு புயல் தாக்குவது மூன்றாவது தடவையாகும்.

“இந்த புயல் காற்றினால் மரங்கள் வீழ்ந்தது மற்றும் வீட்டின் கூரை ஓடுகள் என்பனவும் சேதமடைந்தன, ”என்று பெர்மாய் சட்டமன்ற உறுப்பினர் இங்கு செய்தியாளர்களிடம் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here