‘கைபேசி’க்கு தடை; விதி அமல்படுத்தப்படவில்லை என்கிறார் மூடா வேட்பாளர்

மூடாவின் தஞ்சோங் பியா வேட்பாளர் லிம் வெய் ஜியட், வாக்குச் சாவடிகளில் கைபேசிகளுக்கான தேர்தல் ஆணையத்தின் தடை அமல்படுத்தப்படவில்லை என்று கூறுகிறார்.

முன்னதாக, வாக்காளர்கள் வாக்களிக்க தங்கள் வாக்குச் சாவடிகளுக்குள் நுழைவதற்கு முன்பு தங்கள் கைபேசிகளை ஒப்படைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கூறியுருந்தது. ஆனால் அது  அமல்படுத்தப்படவில்லை என்று லிம் கூறினார்.

அவர் தனது ட்விட்டர் பதிவில், “நான் கடந்து வந்ததன் அடிப்படையில் (அவரது வாக்களிப்பு), தேர்தல் ஆணையத்தின் விதி அமல்படுத்தப்படவில்லை. வாக்காளர்கள் வாக்களிக்கும்போது தூண்டுதல்களைத் தடுக்க இந்த விதி முக்கியமானது என்றார்.

வாக்குப்பதிவு மற்றும்  முகவர்கள் மற்றும் தேர்தல் ஆணையம் இதில் தீவிர கவனம் செலுத்தும் என்று நம்புகிறேன்.

திங்களன்று, வாக்குச் சாவடிகளில் மொபைல் போன்கள் அனுமதிக்கப்படாது என்று தேர்தல் ஆணையம் கூறியது. வாக்காளர்கள் தங்கள் வாக்குச் சீட்டுகளைப் பெற்ற பிறகு தங்கள் சாதனங்களை நிர்ணயிக்கப்பட்ட இடங்களில் வைக்க வேண்டும்.

இது மக்களைத் தூண்டுவதைத் தடுக்கும் என்று சில கட்சிகள் கூறியதால், சில வாக்காளர்கள் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களித்ததற்கான ஆதாரத்தை தங்கள் வாக்குச் சீட்டை புகைப்படம் எடுத்து காட்ட நேரிடும் என்பதால் கைபேசிக்கு தடைவிதிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் கூறியிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here