டத்தோஸ்ரீ எம் சரவணன் தமது துணைவியார் டத்தின்ஸ்ரீ கவிதாவுடன் எஸ்.கே. ஒன்று தேசியப் பள்ளியில் வாக்களிப்பு

தாப்பா நாடாளுமன்ற தேசிய முன்னணி வேட்பாளரும் ம.இ.கா தேசிய துணைத் தலைவருமாகிய டத்தோஸ்ரீ எம். சரவணன் தமது துணைவியார் டத்தின்ஸ்ரீ வி. கவிதாவுடன் இங்குள்ள எஸ்.கே. ஒன்று தேசியப் பள்ளியில் காலை மணி 10.37 க்கு வாக்களித்தார்.

ஒரு சுமூகமான வாக்களிப்பு தாப்பாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 61,946 பேர் தாப்பா நாடாளுமன்றத்தில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். காலையிலேயே தங்களின் கடமையை நிறைவேற்றும் வகையில் மக்கள் வாக்களிக்க துவங்கி விட்டனர். வெளியூர்களில் வசிக்கும் வாக்காளர்களும் திருப்தியளிக்கும் வகையில் வாக்களிக்க வருகைப்புரிந்துள்ளனர்.

இதன் வாயிலாக தங்களின் பிரதிநிதியான தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை முறையாக நிறைவேற்றுகின்றனர் என்பதைக் காட்டுகிறது என வாக்களித்த பின் செய்தியாளர்களுக்கு வழங்கிய தகவலில் அவர் குறிப்பிட்டார்.

நீண்ட வரிசையில் நிற்க வைக்காமல் இலகுவாக வாக்களிக்கும் சேவையை தேர்தல் ஆணையம் ஏற்படுத்தி இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. போலீஸ் துறையினரும் சிறந்த பாதுகாப்பைக் கொடுத்துக்கொண்டிருக்கின்றனர். இவ்வேளையில் அவர்களுக்கு நன்றியை தெரிவிக்கிறேன் என்றும் சரவணன் குறிப்பிட்டார்.

-ராமேஸ்வரி ராஜா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here