வாக்களிப்பு நாளில் கட்சி சின்னத்தை அணிந்ததற்காக ஹாடி மீது விசாரணை நடத்த வேண்டும் என்கிறது பெர்சே

பெட்டாலிங் ஜெயா, நவம்பர் 19 :

இன்று வாக்களிக்கும்போது பாஸ் கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் பாஸ் கட்சியின் சின்னம் பொறிக்கப்பட்ட அங்கியை அணிந்து வந்ததற்காக அவரை விசாரணை செய்ய வேண்டும் என்று பெர்சே தலைவர் தாமஸ் ஃபேன் தெரிவித்தார்.

இது தொடர்பில் FMT இணையத்தளம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இன்றைய வாக்களிப்பு நாளில் ஹாடி அவாங் கட்சியின் சின்னம் பொறிக்கப்பட்ட அங்கியை அணிந்திருக்கும் புகைப்படம் டுவிட்டரில் வெளிவந்தது.

“இது தெளிவான ஒரு தேர்தல் குற்றமாகும், கட்சி சின்னம் அல்லது சின்னம் உள்ள ஆடைகளையோ வாக்குச்சாவடி மையத்திற்குள் அணிவது குற்றம் என்று தெளிவாக உள்ளது” என்று அவர் கூறினார்.

இது குறித்து காவல்துறையும், தேர்தல் ஆணையமும் விசாரணை நடத்த வேண்டும் என்று அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

இந்தச் செயலுக்கு தேர்தல் குற்றங்கள் சட்டம் 1954 இன் பிரிவு 26(1)(g)ஐ அவர் மேற்கோள் காட்டினார், இது வாக்காளர்கள் எந்த அரசியல் கட்சி சார்புடைய ஆடைகளையும், கட்சி சின்னங்கள், சின்னம் அல்லது சின்னங்கள் மற்றும் வேட்பாளர்களின் முகம் பொறிக்கப்பட்ட பொருட்களை வாக்குச் சாவடியிலிருந்து 50 மீட்டருக்குள் அணிவதைத் தடை செய்கிறது.

இந்த சட்டத்திற்கு முரணாக செயற்படும் எந்தவொரு நபருக்கும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஒரு வருட சிறைத்தண்டனை, RM5,000 க்கும் குறைவான அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்த்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here