LPT1 விபத்தில் பெற்றோர்கள் கொல்லப்பட்டதால், மூன்று உடன்பிறப்புகள் ஆதரவற்றவர்களாகினர்

குவாந்தான் கிழக்கு கடற்கரை எக்ஸ்பிரஸ்வே ஃபேஸ் 1 (LPT1) இன் கிலோமீட்டர் 200  கம்போங் பாயா பங்கூர் அருகே நடந்த விபத்தில், அவர்களது பெற்றோர் மற்றும் அவர்களது இளைய சகோதரன் உயிரிழந்ததால், மூன்று உடன்பிறப்புகள் ஆதரவற்றவர்களாகினர்.

குவாந்தான் மாவட்ட காவல்துறைத் தலைவர் ACP Wan Mohd Zahari Wan Busu, மாலை 4 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், ஒப்பந்ததாரர் முகமது ஷபிக் ஜைலானி, 33 அவரது மனைவி, ஃபைஸ்னூர் மன்சோர் 32, ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களது 10 மாத மகன் தர்யன் மார்வா,  தெங்கு அம்புவான் அப்சான் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இந்த தம்பதியின் மற்ற மூன்று குழந்தைகள் – முகமது டேனிஷ் உகாஷா 9, தியா மெடினா 5, மற்றும் டாமியா மெலிசா 2, ஆகியோர் சிறு காயங்களுக்கு உள்ளாகினர்.

மாரானின் பண்டார் ஜெங்காவில் இருந்து குவாந்தனுக்கு முகமட் ஷபிக் ஓட்டிச் சென்ற நான்கு சக்கர வாகனம் சாலையின்  ஓரத்தில் உள்ள மரத்தில் மோதுவதற்கு முன்பு சறுக்கி விழுந்ததில் இந்த விபத்து நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

பலியானவர்களின் உடல்கள் அனைத்தும் பிரேத பரிசோதனைக்காக HTAA க்கு அனுப்பப்பட்டதாகவும், சாலை போக்குவரத்து சட்டம் 1987 இன் பிரிவு 41 (1) இன் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் வான் முகமட் ஜஹாரி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here