கோத்தா பாருவில் தக்கியுதீன் வெற்றி

கோத்த பாரு: 15வது பொதுத் தேர்தலில் (GE15) 22,613 வாக்குகள் பெரும்பான்மையைப் பெற்ற பிறகு, பாஸ் கட்சியின் பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ தக்கியுதீன் ஹாசன் கோத்த பாரு நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றார்.

GE15 இல் தக்கியுதின் 41,869 வாக்குகளைப் பெற்றார். அதே சமயம் பக்காத்தான் ஹராப்பானின் டாக்டர்  ஹஃபிட்சா முஸ்தகிம் 19,256 வாக்குகளும், தேசிய முன்னனி வேட்பாளர் டத்தோஸ்ரீ ரோஸ்மாடி இஸ்மாயில் 16,168 வாக்குகளும் பெற்றனர்.

கடந்த GE14 இல், தக்கியுதீன் 5,869 வாக்குகள் பெரும்பான்மையுடன் பிஎன் மற்றும் பிகேஆர் வேட்பாளர்களை தோற்கடித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here