தாப்பா தொகுதியில் டத்தோஶ்ரீ சரவணன் வெற்றி

பேராக், தாப்பா நாடாளுமன்ற தொகுதியில் டத்தோஶ்ரீ சரவணன் 5,064 அதிக பெரும்பான்மை வாக்குகளுடன் வெற்றி பெற்றார். அத்தொகுதியில் ஆறுமுனை போட்டி நிலவியது.

நம்பிக்கைக் கூட்டணியைப் பிரதிநிதித்து கெ அடிலான் கட்சியின் உதவித் தலைவரும் வழக்கறிஞருமான சரஸ்வதி கந்தசாமி,  தேசிய கூட்டணியிலிருந்து பெர்சாத்து கட்சியைச் சேர்ந்த டத்தோ முஹம்மட் யாட்சின், வாரிசான் கட்சியிலிருந்து முஹம்மட் அக்பார் ஷேரிப், பெஜுவாங் கட்சியிலிருந்து மியோர் நோர் ஹைடிர் ஆகியோர் போட்டியிட்ட வேளையில் சுயேட்சை வேட்பாளர்களாக கதிரவன் முருகன் ஆகியோரும் களமிறங்கினர்.

சரவணனுக்கு 18,398 வாக்குகள் கிடைத்தன. 5,064 வாக்குகள் பெரும்பான்மையில் அவர் பெற்றார்.

பக்காத்தான் ஹாரப்பான் – பிகேஆர் வேட்பாளர் வழக்கறிஞர் சரஸ்வதி கந்தசாமி 13,334 வாக்குகள் பெற்றார்.

பெரிக்காத்தான் நேஷனல் – பெர்சாத்து வேட்பாளர் – டத்தோ ஹாஜி முகமட் யாட்சான் பின் ஹாஜி முகமட் 12,115 வாக்குகள் பெற்றார்.

பெஜூவாங் கட்சி சார்பில் போட்டியிட்ட மியோர் ஹைடிர் 335 வாக்குகளைப் பெற்று வைப்புத் தொகையை இழந்தார்.

சபா வாரிசான் கட்சி சார்பாகப் போட்டியிட்ட முகமட் அக்பார் பின் யாசின் 200 வாக்குகள் மட்டுமே பெற்று வைப்புத் தொகையை இழந்தார்.

மற்றொரு சுயேச்சை வேட்பாளரான எம்.கதிரவன் 99 வாக்குகளைப் பெற்று வைப்புத் தொகையை இழந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here