குடியிருப்பாளர்களுக்கு சொந்தமான மூன்று கார் கண்ணாடியை உடைத்த குற்றச்சாட்டில் ஆடவருக்கு RM6,000 அபராதம்

மலாக்கா, நவம்பர் 21 :

மூன்று குடியிருப்பாளர்களுக்கு சொந்தமான கார் கண்ணாடி உடைந்து போகும் வரை, அதன் மீது செங்கல் எறிந்த குற்றச்சாட்டின் பேரில் ஒரு வேன் ஓட்டுநருக்கு ஆயிர் கெரோ மாவட்ட நீதிமன்றம் RM6,000 அபராதம் விதித்தது.

குற்றம் சாட்டப்பட்டவர், சி தமிழ்வாணன், 29, என்பவருக்கு எதிரான மூன்று குற்றச்சாட்டுகளை அவர் ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து, அவரை குற்றவாளி என்று தீர்ப்பளித்து மாவட்ட நீதிமன்ற நீதிபதி சாரதா ஷியென்ஹா முகமட் சுலைமான் அவருக்கு இந்த தண்டனையை வழங்கினார்.

“குற்றம் சாட்டப்பட்டவர் தனக்கு எதிரான ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தலா RM2,000 அபராதம் அல்லது அவர் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் அபராதம் செலுத்தத் தவறினால் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படும்” என்றும் அவர் கூறினார்.

முதல் குற்றச்சாட்டின்படி, லீ சீ செங்கின் தோயோத்தா கொரோலா (32) காரின் பின்புற ஜன்னலில் செங்கலை எறிந்து, சுமார் RM600 நஷ்டத்தை ஏற்படுத்தியததாக தமிழ்வாணன்மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

இரண்டாவது மற்றும் மூன்றாவது குற்றச்சாட்டுகளுக்கு, அவர் முறையே ஓங் கிம் ஹாக், 64, மற்றும் சூ ஐ லீன், 60 ஆகியோருக்கு சொந்தமான புரோத்தோன் சாகா மற்றும் புரோத்தோன் பெர்சோனாவின் பின்புற மற்றும் முன் கண்ணாடிகளில் பெரிய செங்கற்களை வீசியது கண்டறியப்பட்டது. இதனால் அவர்களுக்கு முறையே RM1,300 மற்றும் RM1,600 இழப்பு ஏற்பட்டது.

குற்றம் சாட்டப்பட்டவர் ஜூலை 12 ஆம் தேதி நள்ளிரவு 12.10 முதல் 12.25 க்கு இடையில் 242D, 242F மற்றும் MT 223, தாமான் சின், ஜாலான் செமபோக் என்ற முகவரியில் உள்ள அவர்களின் வீடுகளுக்கு முன்பாக அனைத்து குற்றங்களையும் செய்தார் எனக் கூறப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here