பிரதமராக தன்னை ஆதரிக்கும் எம்.பி.க்கள் கையெழுத்திட்ட SDs வெளியிடுவேன் என்கிறார் முஹிடின்

பெரிகாத்தான் நேஷனல் (PN) தலைவர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின், கூட்டணிக்கு ஆட்சி அமைக்க போதுமான எண்ணிக்கையும் ஆதரவும் உள்ளது என்பதற்கான சான்றாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் சட்டப்பூர்வ அறிவிப்பை (SD) சமர்ப்பிபேன் என்றார்.

தேசிய முன்னணி (BN) தலைவர் டத்தோஸ்ரீ அஹ்மட் ஜாஹிட் ஹமிடியின் கூற்றுக்கள், அரசாங்கத்தை அமைப்பதற்காக பெரிகாத்தான் கட்சிக்கு ஆதரவை வழங்குவது பற்றி கபூங்கன் பார்ட்டி சரவாக்குடன் (ஜிபிஎஸ்) தேசிய முன்னணி ஒருபோதும் விவாதிக்கவில்லை என்று முஹிடின் கூறினார்.

எந்தவொரு எம்பியும் கூட்டாட்சி அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் என்னைப் பிரதமராக ஆதரிப்பதாகத் தீர்மானித்தால் அது நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமை. யாரேனும் பிரதமராக விரும்பினால், அவர் அல்லது அவள் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை, குறைந்தபட்சம் 112 பேரின் ஆதரவைப் பெற வேண்டும் என்று அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது  என்று நேற்று பெர்சத்து உச்ச மன்ற கூட்டத்திற்கு தலைமை தாங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.

முஹிடின் மேலும் கூறுகையில், நான் பிரதமராக வருவதற்கு ஆதரவை வழங்குவதற்கு, PN இன் கீழ் இல்லாவிட்டாலும், எந்த கட்சியை சேர்ந்தவராக இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் அவர்களை  கட்சி தாவல் தடுப்பு  சட்டம் தடுக்காது.

அவர்கள் தங்கள் கட்சியை விட்டு வெளியேறாமல், தனிநபர்களாகவும், நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் தங்கள் ஆதரவை வழங்குவதே இதற்குக் காரணம். சட்டத்தின்படி அது தவறல்ல என்றார்.

முன்னதாக, இன்று பிற்பகல் 2 மணிக்குள் கூட்டணி மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இஸ்தானா நெகாராவுக்கு ஆட்சி அமைக்க ஒப்புக்கொண்ட கூட்டணி குறித்து தெரிவிக்க வேண்டும் என்று  மாமன்னர் ஆணையிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அதற்குள் அந்தந்த பிரதமர் வேட்பாளரின் பெயரை சமர்ப்பிக்குமாறு தலைவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

சனிக்கிழமை முடிவடைந்த 15ஆவது பொதுத் தேர்தலில் (GE15), பக்காத்தான் ஹராப்பான் (PH) 82 நாடாளுமன்ற இடங்களைப் பெற்று அதிகக் கட்சியாக உருவெடுத்தது. அதைத் தொடர்ந்து PN (73), தேசிய முன்னணி (30), GPS (22), கபுங்கன் ரக்யாத் சபா (GRS) (6), பார்ட்டி வாரிசான் (3) மற்றும் Parti Kesejahteraan Demokratik Masyarakat (KDM) மற்றும் பார்ட்டி பங்சா மலேசியா (PPM) ஆகியோரால் தலா ஒன்று.

இரண்டு இடங்களில் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். ஆட்சி அமைக்க தனிப்பெரும்பான்மை 112 இடங்கள் தேவை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here