மாமன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத் ஷா, அடுத்த கூட்டாட்சி அரசாங்கத்தை யார் அமைப்பது என்பது குறித்து விரைவில் முடிவெடுப்பேன் என்று கூறுகிறார். இஸ்தானா நெகாராவிலிருந்து ஊடகவியாலளர்களை சந்திக்க வெளியே வந்த சுல்தான் அப்துல்லா “not seen anything yet” தன்னால் எதையும் வெளிப்படுத்த முடியவில்லை என்றார்.
தயவுசெய்து பகுத்தறிவுடன் இருங்கள். நாங்கள் முன்னேற வேண்டும். நமது அன்புக்குரிய தேசத்திற்காக நாம் முன்னேற வேண்டும் என்று சுல்தான் அப்துல்லா கூறினார். முடிந்தவரை சீக்கிரம் முடிவெடுக்கிறேன்.
பக்காத்தான் ஹராப்பான் அல்லது பெரிகாத்தான் நேஷனல் ஆகிய இரு கட்சிகளிலும் அரசாங்கத்தை அமைப்பதற்கு தேசிய முன்னணி ஆதரவு அளிக்காது என்றும் எதிர்க்கட்சியில் நீடிப்பதாகவும் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்ததை அடுத்து இது வந்துள்ளது.