கடற்கொந்தளிப்பு, உயர் அலைகளினால் மூவாரில் வெள்ளம்

மூவார், நவம்பர் 23 :

பாரிட் ஜாவாவில் உள்ள கம்போங் பாரிட் கெடோன்டாங் கடலில், இன்று காலை ஏற்பட்ட கடற்கொந்தளிப்பு மற்றும் உயர் அலைகள் காரணமாக மூவாரின் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியதை போலீசார் இன்று உறுதிப்படுத்தினர்.

மூவார் மாவட்டத்தின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதைக் காட்டும் 43 வினாடிகள் கொண்ட காணொளி சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அவ்விடத்திற்குஉடனே காவல்துறை, குடிமைத் தற்காப்புப் படை (APM) மற்றும் கிராமத் தலைவர் ஆகியோர் கம்போங் பாரிட் கெடோன்டாங் லாட், பாரிட் ஜாவாவுக்கு விரைந்தனர் என்று மூவார் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் Raiz Mukhliz Azman Aziz கூறினார்.

கடலில் இருந்து சுமார் இரண்டு மீட்டர் தொலைவில் அமைந்துள்ள பகுதியில் வெள்ள நீர் இன்று காலை 10 மணியளவில் குறையத் தொடங்கியதால், அங்கிருந்த குடியிருப்பாளர்கள் யாரும் வெளியேற்றப்படவில்லை,” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here