கோலாலம்பூர், நவம்பர் 24 :
இன்று மலேசியாவின் 10வது பிரதமராக பதியேற்றிருக்கும் அவரது தந்தையான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு ‘ஐ லவ் யூ பப்பா. உங்களை நினைத்து நான் எப்போதும் பெருமைப்படுகிறேன், நீங்கள் கைதியாக இருந்தபோதும் கூட” என்று கூறி, உருக்கமான பதிவினை முகநூலில் பதிவிட்டுள்ளார் நூருல் இசா அன்வார்.
பிரதமரான பின்னர் சக மலேசியர்களை ஒன்றிணைக்கும் முயற்சிகள், பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பது மற்றும் முதலீடுகளை ஈர்ப்பது உள்ளிட்ட பல சவால்கள் இன்னும் உஃங்கள் முன்னால் உள்ளன என்று பிகேஆர் துணைத் தலைவருமான நூருல் இசா தெரிவித்தார்.
1998 ஆம் ஆண்டு முதல், தங்களுக்கு அல்ல மாறாக, மக்கள் அனைவருக்கும் நீதி கோரி தமது கட்சியின் போராட்டம் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
“வாழ்க்கையில், இந்த உலகில், நாம் சவால்களில் இருந்து தப்பிக்க முடியாது, நாம் தோற்கும்போது, நாம் சோதிக்கப்படுகிறோம், நாம் வெல்லும்போதும் நாம் சோதிக்கப்படுகிறோம்” என்றும் அவர் மேலும் கூறினார்.