மலேசியாவின் 10வது பிரதமராக பதவியேற்ற டத்தோஸ்ரீ அன்வாருக்கு டாக்டர் வீ கா சியோங் வாழ்த்து

கோலாலம்பூர், நவம்பர் 24 :

மலேசியாவின் 10வது பிரதமராக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பதவியேற்றதற்கு மசீச தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் வீ கா சியோங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் அன்வாரின் தலைமையில் வருங்கால அரசாங்கத்திற்கான நம்பிக்கை செய்தியுடன் தனது வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்தார்.

“YAB PM10 க்கு வாழ்த்துக்கள்! புதிய YAB பிரதமரின் தலைமையின் மூலம், நம் நாடு பழிவாங்கும் அரசியலை ஒழிக்க முடியும் என்றும் ஒற்றுமையாக இருப்பதன் மூலம் பன்முகத்தன்மை கொண்ட சமூகத்தில் வரும் எந்தவிதமான பிளவுகளையும் தவிர்க்க முடியும்” என்றும் அவர் இன்று வியாழக்கிழமை (நவ. 24) வெளியிட்டுள்ள ஒரு பேஸ்புக் பதிவில் கூறினார்.

மேலும் மத்திய அரசாங்கத்தின் பிரதமராக அன்வாரை நியமிப்பதற்கான மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷாவின் முடிவை தாம் மதிப்பதாகக் கூறினார்.

நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மைக்காகவும், மக்களின் நலனுக்காக அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக ஒன்றிணைந்து செயல்படும் இந்த முடிவை நான் மதிக்கிறேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here