மலேசிய திரைப்பட இயக்குனர் மாரடைப்பால் காலமானார்

மலேசிய எழுத்தாளரும்    திரைப்பட  இயக்குனருமான அஸ்ஹரி முகமது ஜைன் வியாழன் அன்று (நவம்பர் 24) நள்ளிரவு 12.05 மணியளவில்   காலமானார்.  பிப்ரவரி 2022 இல், அவருக்கு  மூளையில் ரத்தக்கசிவு  ஏற்பட்டதால்  பக்கவாதம் வந்துள்ளது என கண்டறியப்பட்டது. இந்நிலையில்   சில  மாதங்களுக்கு முன்பு  உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

பின்னர்  இரண்டு மாதங்களுக்குப் பிறகு, அஸ்ஹரியின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்பட்டது,  அதனால் அவர் வீட்டிற்குச் செல்ல அனுமதிக்கப்பட்டார்.  இதைத் தொடர்ந்து  ஒன்பது மாதங்களுக்குப் பிறகு    தற்போது மாரடைப்பால் காலமானார்.  அவருக்கு மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர்.

வியாழன் காலை 10 மணிக்கு மேரு கிள்ளானில் உள்ள ஜாலான் பாய்ப் இஸ்லாமிய கல்லறையில் அவர் நல்லடக்கம் செய்யப்பட்டார்.  தனது சகாக்களிடையே ஜாக் என்று அழைக்கப்படும் அசரி, 2004 ஆம் ஆண்டு  முதல் மலேசியத் திரையுலகில் எழுத்தாளராகவும் தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார்.   எழுத்து மற்றும் இயக்கம் தவிர, அஸ்ஹரி பல்கலைக்கழக டெக்னாலஜி மாராவில் (UiTM) திரைப்படம், தியேட்டர் மற்றும் அனிமேஷன் துறையின் விரிவுரையாளராகவும் இருந்தார்.

அவர் எழுதிய படங்களில் டாங்காய் ஜெரிங், மிஸ்டிக் போர்ட்ரெய்ட், அனக் மாமி கெம்பாலி, நானா தஞ்சங் மற்றும் டியுங் ஆகியவை அடங்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here