அனைத்து மலேசியர்களுக்கும் ஏற்ற கூட்டாட்சி முறைக்கு முன்னுரிமை வழங்கும் பிரதமராக அன்வார் இருப்பார் – PAS நம்பிக்கை

கோலாலம்பூர், நவம்பர் 25 :

நாட்டின் 10வது பிரதமராக பதவியேற்ற டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு PAS கட்சி தந்து வாழ்த்துக்களை தெரிவித்துக்கொளவதாக, PAS பொதுச்செயலாளர் டத்தோஸ்ரீ தக்கியுடின் ஹாசன் தெரிவித்தார்.

டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பிரதமராக தனது கடமையை பொறுப்புடனும் நியாயமாகவும் செய்வார் என்று PAS நம்புவதாக அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

மேலும் கூட்டாட்சி அரசாங்கத்தில் இணைய பெரிக்காத்தான் நேஷனலுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த விஷயத்தை நாங்கள் எங்கள் PN கூட்டணிக்கட்சிகளுடன் விவாதிப்போம், மேஅத்தோடு 15வது பொதுத் தேர்தலின் போது PAS மற்றும் PN ஐ ஆதரித்த வாக்காளர்களிடமிருந்தும் கருத்துக்களைப் பெறுவோம்” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here