தேசிய முன்னணியின் துணைப்பிரதமர் வேட்பாளரை ஜாஹிட் முடிவு செய்வார்; சரவணன் தகவல்

துணைப் பிரதமர் பதவிக்கான கூட்டணியின் வேட்பாளர் யார் என்பதனை தேசிய முன்னணி (BN) தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி முடிவு செய்வார் என்று மஇகா துணைத் தலைவர் எம் சரவணன் தெரிவித்துள்ளார். தேசிய முன்னணியின் உச்சமன்ற கூட்டத்தின் போது இந்த விஷயம் விவாதிக்கப்பட்டதாக சரவணன் கூறினார். ஆனால் அந்த பதவிக்கு சாத்தியமான வேட்பாளராக எந்த பெயரும் குறிப்பிடப்படவில்லை என்று பெரித்தா ஹரியான் தெரிவித்துள்ளது.

நாங்கள் இந்த விஷயத்தைப் பற்றி விவாதித்தோம். ஆனால் வேட்பாளர் தீர்மானிக்கப்படவில்லை. தலைவருக்கு ஆணை இருப்பதால் அதை முடிவெடுப்பதை நாங்கள் விட்டுவிடுகிறோம் என்று அவர் மேற்கோள் காட்டினார்.

நேற்று, பிரதமர் அன்வார் இப்ராஹிம், தேசிய முன்னணி மற்றும் கபுங்கன் பார்ட்டி சரவாக் (GPS) ஆகிய அரசாங்க கூட்டணியில் உள்ள மற்ற கூட்டணிகளுக்கு செல்லும் பதவிகளுடன் இரண்டு துணைப் பிரதமர் பதவிகள் உருவாக்கப்படும் என்று கூறினார். பக்காத்தான் ஹராப்பான் தலைவர் அன்வார் நேற்று இஸ்தானா நெகாராவில் மாமன்னர் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here