நவம்பர் 27ஆம் தேதியும் ஜோகூரில் பொது விடுமுறை

ஜோகூர் பாரு, நவம்பர் 25 :

ஜோகூர் மாநிலத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 27) பொது விடுமுறை அளிக்கப்படும் என்று ஜோகூர் ஆட்சியாளர் சுல்தான் இப்ராஹிம் இப்னி அல்மர்ஹூம் சுல்தான் இஸ்கந்தர் ஆணையிட்டுள்ளார்.

ஜோகூர் தாருல் தாசிம் (JDT) கால்பந்து கிளப் மலேசியா கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறி, வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ( வரும் ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை அளிக்கப்படுகிறது” என்று ஜோகூர் மாநிலச் செயலாளர் டான்ஸ்ரீ டாக்டர் அஸ்மி ரோஹானி இன்று வெள்ளிக்கிழமை (நவம்பர் 25) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

திங்களன்று (நவம்பர் 28) தேசிய பொது விடுமுறையை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முன்னதாக அறிவித்திருந்ததால், இது ஜோகூருக்கு இது ஒரு நீண்ட வார இறுதியாக இருக்கும். ஏனெனில் ஜோகூர் வார இறுதி நாட்களாக வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளை அனுசரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here