புக்கிட் டுரியானில் நண்பர்களுடன் மலையேறும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஆடவர் ஒருவரைக் காணவில்லை

பாகோ, நவம்பர் 25 :

இங்குள்ள புக்கிட் டுரியான், பத்து 10 இல் நண்பர்களுடன் மலையேறும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது ஆடவர் ஒருவர் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது.

பாகோ தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் ஆபரேஷன்ஸ் கமாண்டர், துணை தீயணைப்பு கண்காணிப்பாளர் முகமட் ஃபட்லி இஸ்மாயில் கூறுகையில், இன்று வெள்ளிக்கிழமை (நவம்பர் 25) அதிகாலை 12.59 மணிக்கு இந்த சம்பவம் குறித்து தமது நிலையத்திற்கு அழைப்பு வந்தது என்றார்.

அதைத் தொடர்ந்து, பாகோ தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தில் இருந்து 11 பேர் கொண்ட குழுவும், தீயணைப்பு வாகனமும் உடனடியாக அந்த இடத்திற்கு அனுப்பப்பட்டன.

56 வயதான கோ சாங் செங் என்ற ஆடவரே சுமார் 20 நண்பர்களுடன் மாலை 6 மணியளவில் ஏறும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது காணாமல் போனதாக அவர் கூறினார்.

நண்பர்கள் அவரை அப்பகுதியில் தேடியும் கிடைக்காததால் தீயணைப்பு நிலையத்திற்கு அறிவித்தனர் என்று அவர் இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here