5 ஆவது முறையாக கோல் அடித்து ரொனால்டோ புதிய சாதனை

உலகக்  கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் தொடங்கி  நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் நேற்று நடைபெற்ற குரூப் எச் பிரிவு லீக் ஆட்டத்தில் போர்ச்சுகல், கானா அணிகள் மோதின. முதல் பாதியில் இரு அணி வீரர்களும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதனால் 0-0 என சமனில் இருந்தது. இறுதியில், கானாவுக்கு எதிரான போட்டியில், 3-2 என்ற கோல் கணக்கில் போர்ச்சுக்கல் அணி வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில், போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோ 65-வது நிமிடத்தில் கோல் அடித்தார். இந்நிலையில், 5 உலக கோப்பைகளில் (2006, 2010, 2014, 2018, 2022) கோல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை ரொனால்டோ படைத்துள்ளார்.

இன்று அதிகாலை நடைபெற்ற குரூப் ஜி பிரிவு லீக் ஆட்டத்தில் பிரேசில், செர்பியா அணிகள் மோதின. முதல் பாதியில் இரு அணி வீரர்களும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதனால் 0-0 என சமனில் இருந்தது. ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் பிரேசில் வீரர் ரிச்சர்லிசன் 62 மற்றும் 73 வது நிமிடங்களில் ஒரு கோல் அடித்து அசத்தினார். இறுதியில், பிரேசில் அணி 2-0 என்ற கோல் கணக்கில் செர்பியாவை வீழ்த்தியது.

குரூப்-எச் பிரிவில்  உருகுவே மற்றும் தென் கொரியா அணிகள் விளையாடின. துவக்கத்தில் இருந்தே இரு அணி வீரர்களும் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டு கோல் கம்பத்தை நோக்கி முன்னேறினர்.    ஆனால் இரு தரப்பினரும் கோல் வாய்ப்பை தவறவிட்டனர். இதனால் முதல் பாதியில் கோல் எதுவும் அடிக்கப்படவில்லை.  கூடுதல் நேரத்திலும் கோல் முயற்சி பலிக்கவில்லை. எனவே, கோல் இன்றி ஆட்டம் டிரா ஆனது. இரு அணிக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here