இனவெறியை தூண்டும் சமூக ஊடகப் பதிவுகள் தொடர்பில் அமானா காவல்துறையில் புகார்

கோலாலம்பூர், நவம்பர் 26 :

சமீபத்தில் இனவெறியை தூண்டும் வகையில் ஃபேஸ்புக் மற்றும் டிக்டோக்கில் ஒன்பது இடுகைகளைக் கண்டறிந்ததாகவும், அது தொடர்பில் விரைவான நடவடிக்கை எடுக்குமாறு பார்ட்டி அமானா நெகாரா காவல்துறையில் புகாரளித்துள்ளது.

அமானா தேசிய இயக்கத் தலைவர் முகமட் சானி ஹம்சான் கூறுகையில், “எனது கருத்துப்படி, இந்த இடுகைகள் இனவெறியாகவும், பல்வேறு இனங்களுக்கு இடையே வெறுப்பை விதைக்கும் முயற்சியாகவும் கருதப்படலாம், இது இனப் பிளவுக்கு வழிவகுக்கும். மேலும் இந்த பதிவுகள் மலேசியர்களிடையே குரோதம், வெறுப்பு மற்றும் இன மற்றும் மத நல்லிணக்கத்தை அச்சுறுத்தும் உணர்வுகளை ஏற்படுத்துகின்றன,” என்று அவர் இன்று சனிக்கிழமை (நவம்பர் 26) டாங் வாங்கி போலீஸ் தலைமையகத்தில் போலீஸ் அறிக்கையை தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்த விஷயத்தை காவல்துறை விரைவாக விசாரித்து, இந்த இடுகைகளைப் பதிவேற்றிய குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு முன்னாள் உலு லங்காட் எம்.பி.யாக இருந்த முகமட் ஜானி காவல்துறைக்கு வலியுறுத்தினார்.

டாங் வாங்கி மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் நூர் டெல்ஹான் யஹாயா அமனாவிடமிருந்து அறிக்கை பெறுவதை உறுதிப்படுத்தியதுடன் மேலதிக நடவடிக்கைக்காக புக்கிட் செந்தோசா போலீசாரிடம் வழக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here