நடக்க முடியாத நிலையில் சமந்தா

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. தென்னிந்திய அளவில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள அவரது திரைப்படங்கள் தொடர்ந்து வரவேற்பை பெற்று வருகின்றன. கடைசியாக சமந்தாவின் நடிப்பில் வெளியான யசோதா திரைப்படமும் அமோக வெற்றிப்பெற்றது. நல்ல வசூல் பார்த்துள்ளது.

இதற்கிடையே சில தினங்களுக்கு முன்பு தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், இதற்காக சிகிச்சை பெற்று வருவதாகவும் சமந்தா தெரிவித்து இருந்தார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் திடீரென உடல்நிலை பாதிப்பு காரணமாக சமந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் பரவின. ஆனால் அவர் வீட்டில் நலமுடன் ஓய்வெடுத்து வருவதாக உதவியாளர் தெரிவித்து உள்ளார்.

தற்போது சமந்தா சிறிது தூரம் கூட நடக்க முடியாத நிலையில் இருப்பதாக தெலுங்கு இணையதளங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. சமந்தா விரைவில் குணம் அடைய திரையுலகினரும், ரசிகர்களும் வாழ்த்தி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here