அன்வாரை வாரிசான், GRS ஆகிய கட்சிகளை சேர்ந்தவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை வாரிசான் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் ஷஃபி அப்டால் மரியாதை நிமித்தமாக வருகை தந்தார். ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 27) மாலை தனது அலுவலகத்தில் ஷஃபி தன்னைச் சந்தித்ததாக அன்வார் ஒரு முகநூல் பதிவில் கூறினார்.

சபா மக்களின் நலன்களுக்காக ஒரு ஒற்றுமை அரசாங்கத்தை உருவாக்குவதற்கும் மற்றும் ஸ்திரப்படுத்துவதற்கும் ஆதரவளிப்பதில் அவரது அர்ப்பணிப்பு மற்றும் அவரது கட்சியின் அர்ப்பணிப்பை நான் வரவேற்கிறேன் என்று அவர் கூறினார்.

சபா முதல்வர் டத்தோஸ்ரீ ஹாஜி நூர் மற்றும் ஜிஆர்எஸ் தூதுக்குழுவினரும் அதே நாளில் மரியாதை நிமித்தமாக வருகை தந்ததாக அன்வார் கூறினார். ஹாஜிஜி நூர் மற்றும் ஜிஆர்எஸ் ஆகியோர் எனது தலைமையிலான ஒற்றுமை அரசுக்கு முழு ஆதரவை வழங்கியுள்ளனர். மேலும் மாநில அரசு மற்றும் சபா மக்களின் நல்வாழ்வுக்காக அந்த ஆதரவை நான் நிச்சயமாக வரவேற்கிறேன் – பாராட்டுகிறேன் என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here