பழம்பெரும் இந்தி நடிகர் விக்ரம் கோகலே மரணம்

மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த பழம்பெரும் நடிகர் விக்ரம் கோகலே. இவர் இந்தி, மராத்தி உள்ளிட்ட மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 77 வயதான விக்ரம் கோகலேவுக்கு கடந்த நவம்பர் 5-ம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து, அவர் மராட்டியத்தின் புனேவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கபப்ட்டு வந்தபொதும் சிறுநீரகம், இருதயம் உள்ளிட்ட உறுப்புகளின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டன. இதனால், கோமா நிலைக்கு சென்ற நடிகர் விக்ரம் கோகலே, செயற்கை சுவாசக்கருவி உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் விக்ரம் கோகலே இன்று மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உடல் உறுப்புகள் செயல் இழந்ததால் நடிகர் விக்ரம் சோகலே உயிரிழந்தார்.

நடிகர் விக்ரம் கோகலேவின் மறைவிற்கு திரைத்துறையினர், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here