அக்டோபர் மாதம் சுபிட்சமான ஆரோக்கிய மாதமாக மலேசியாவில் கொண்டாடப்படுகிறது

சுபிட்சமான ஆரோக்கிய மலேசிய மாதமான அக்டோபர் மாதத்தில் மலேசியக் குடும்பத்தினர் சிகிச்சை போன்ற விவகாரங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதைக் காட்டிலும் ஆரோக்கியமிக்க வாழ்வாதாரத்தின் மீது கவனம் செலுத்த சுகாதார அமைச்சு ஊக்குவிக்கின்றது.

மலேசியர்களின் சுகாதார நலனைப் பாதுகாக்கும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் மலேசிய சுகாதார மாதம் கொண்டாடப்படும்.

ஆரோக்கியமாக வாழும் கலாச்சாரத்தின் வழி மலேசிய குடும்பங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் விருப்பத்திற்கு ஏற்ப இந்த மலேசிய சுகாதார மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆரோக்கியமான வாழ்க்கை கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தும் வகையில் உலக மனநல தினம் அக்டோபர் 10ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அதே தினத்தில் தேசிய விளையாட்டு தினம், உலக நடை தினம், தேசிய இயற்கை வள தினமும் கொண்டாடப்படுகிறது.

மக்கள் நவீன கால கலாச்சாரத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் வேளையில், மக்களின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

சுகாதார நலனைப் பாதுகாக்கும் பொறுப்பிற்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் ஆரோக்கியமான மலேசிய மாதம் கொண்டாடப்படுகிறது.

தேசிய மலேசிய ஆரோக்கியத் திட்டத்தின் கீழ் இந்த அனுகுமுறை நாடு முழுவதும் அமலாக்கம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த ஆரோக்கிய மலேசிய சுகாதார மாதம் சுகாதார அமைச்சின் தேசிய, மாநில அளவிலும் ஏ.என்.எம்.எஸ் விவேகக் குழுவுடன் கொண்டாடப்படுகிறது.

மலேசிய குடும்பங்களின் சுகாதார நலனை மேம்படுத்தும் நோக்கத்தில் கூட்டு முறையில் ஆரோக்கியமாக வாழும் கலாச்சார நடவடிக்கைகளும் நிகழ்ச்சிகளும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.

ஆரோக்கியமாக வாழும் அதேநேரத்தில் மக்களின் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை உயர்த்தும் அணுகுமுறையும் இதில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

2015ஆம் ஆண்டு தேசிய சுகாதாரம் மற்றும் நோயுற்ற நிலை மீதான ஆய்வை (NHMS) விட 2019ஆம் ஆண்டு மேற்கொண்ட ஆய்வில் மலேசியர்களின் சீகாதாரம் ஆபத்தான, பல்வேறு நோய்ச் சீமைகளைக் கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

நாடு தற்போது கோவிட் – 19 தொற்று பரவலை எதிர்நோக்கியிருக்கும் வேளையில், அது மற்றொரு சவாலாகவே அமைந்துள்ளது.

நாட்டு மக்கள் கோவிட் – 19 தொற்றின் தாக்கத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் மலேசிய குடும்ப கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கும் நாட்டு மக்களின் சுகாதாரத்தை பேணிக்காப்பதற்கும் இந்த மலேசிய சுகாதார மாதம் கொண்டாட்டம் துணை புரியும்.

மலேசியர்களின் சுகாதார நலன் குறித்து 2019ஆம் ஆண்டு தேசிய சுகாதாரம் மற்றும் நோயுற்ற நிலை மீதான ஆய்வின்போது (NHMS), இரு மலேசியர்களில் ஒருவர் கூடுதல் உடல் பருவத்துடனும் நான்கு மலேசியர்களில் ஒருவர் உடல் ரீதியாக ஆரோக்கியமற்ற நிலையில் உள்ளதாகவும் 20 மலேசியர்களில் ஒருவர் மட்டுமே பரிந்துரை செய்துள்ளதுபோல் பழங்களையும் காய்கறிகளையும் உண்டு வருவதாகவும் தெரிய வந்துள்ளது.

மலேசியர்களில் 5 லட்சம் பெரியோர்கள் மனச்சோர்வு அடைந்துள்ள வேளையில், 15 வயதுக்கும் மேற்பட்ட 49 லட்சம் மலேசியர்கள் புகை பிடிக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர்.

இதனால் மலேசியர்கள் பல்வேறு சுகாதார பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர். இதில் 34 லட்சம் பேர் இரு தொற்று அல்லாத நோய்களுக்கும் 17 லட்சம் பேர் மூன்று தொற்று அல்லாத நோய்களுக்கும் ஆளாகி வந்துள்ளனர்.

தொற்று அல்லாத நோய்களுக்கு சிகிச்சை அளிக்க அரசாங்கம் 900 கோடி வெள்ளியை செலவழிக்க வேண்டியுள்ளது.

நாட்டில் அதிகமானோர் இருதய நோயினால் உயிரிழந்து வருவதாகவும் இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

கோவிட் – 19 தொற்றினால் மரணமுற்றவர்களில் 87 விழுக்காட்டினர் குறைந்தது குறைந்தது ஒரு தொற்று அல்லாத நோயைக் கொண்டவர்கள்.

தொற்று அல்லாத நோய் பீடித்துள்ள மலேசியர்கள் எளிதாக கோவிட் – 19 தொற்றுக்கு ஆளாகி வருவதாக ஐ,நா.மேம்பாட்டப் பிரிவு மற்றும் உலக சுகாதார நிறுவனம் மேற்கொண்ட ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

உடல் பருமன் கொண்டவர்கள் 7 மடங்குக்கும் அதிகமாக கோவிட் – 19 தொற்றுக்கு ஆளாகும் வேளையில்,புகை பிடிப்பவர்கள் 1.5 மடங்கு சீக்கிரம் கோவிட் – 19 தொற்றுக்கு ஆளாகுவதோடு அவர்களின் மரண எண்ணிக்கையும் அதிகமாகும்.

மதுபானம் கோவிட் – 19 தொற்று பாதிப்புக்கு மேலும் பக்க விளைவுகளை ஏற்படுத்தும். நீரிழிவு நோய்க்கு ஆளாவர்கள் 3 மடங்கு எளிதாக கோவிட் – 19 தொற்றுக்கு ஆளாகுவர். அதேபோல் இருதய நோய்க்கு ஆளாகியுள்ளவர்கள் 2.5 மடங்கு எளிதில் கோவிட் – 19 தொற்றுக்கு ஆளாகுவார்கள்.

மலேசியர்கள் ஆரோக்கியமற்ற கலாச்சாரத்தில் வாழ்ந்து வருவதால், நாடு பெரிய அளவிலான பாதிப்புகளை எதிர்நோக்கி வருகிறது.

மலேசியர்கள் பல்வேறு கடுமையான நோய்களுக்கு ஆளாகி வருவதால் கடந்த 2017ஆம் ஆண்டு வரை அரசாங்கம் சுகாதாரத்திற்காக 22.53 பில்லியன் ரிங்கிட்டை செலவழித்துள்ளது.(இது சுகாதார அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 40 விழுக்காடாகும்).

வரும் 2040ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 14.5 விழுக்காட்டினர் 65 வயதுக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்களாக இருப்பார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here