சாலையோர குழந்தைகளுக்காக தற்காலிக தங்குமிடம்: மாநில அரசு முடிவு

கோத்த கினபாலு பகுதியில் சாலையோரங்களில் வசிக்கும் குழந்தைகளுக்காக சபா அரசாங்கம் தற்காலிக தங்குமிடத்தை அமைக்கிறது என்று மாநில சட்டசபையில் கூறப்பட்டுள்ளது.  முதல்வரின் உதவி அமைச்சர் ஆபீதின் மடிங்கீர், முன்னோடி திட்டத்திற்காக RM250,000 ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.    இதன் மூலம் அரசாங்கத்திற்குச் சொந்தமான காலி இடத்தில்  தங்கும் வசதிகள் செய்யப்பட உள்ளது.

சாலையோ குழந்தைகள் அதிகபட்சம் மூன்று மாதங்களுக்கு புனர்வாழ்வுக்காக அரசாங்கம்   அமைக்கும்  மையத்திற்கு அனுப்பப்படுவார்கள்  என்று ஆபிதீன் கூறினார்.  இந்த மையம் சுய மேலாண்மை, சமூக வாழ்க்கை மற்றும் முறைசாரா ஆன்மீக கற்றல் பற்றிய சிறப்பு திட்டங்களை வழங்கும்.  மூன்று மாதங்களுக்குப் பிறகு, அவர்கள் தங்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களிடம் திருப்பி அனுப்பப்படுவார்கள்.

குழந்தைகளை மீண்டும் சாலைகளில் அலைய விடாமல் இருக்க பெற்றோர் அல்லது பாதுகாவலர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படும் என்றார்.  குழந்தைகள் மையத்திற்கு அனுமதிக்கப்படுவதற்கு முன்பு சுகாதாரத் துறையினரால் அவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்படும் என்றும், மக்கள் தன்னார்வப் படை (ரேலா) பணியாளர்கள் 24 மணி நேரமும் காவலில் இருப்பார்கள் என்றும் அவர் கூறினார்.

பெரும்பான்மையான சாலையோரக் குழந்தைகள்  பாரம்பரியமாக சபாவின் கிழக்கு கடற்கரை பகுதியில்  வாழ்ந்த நாடற்ற மக்கள்.  கோத்த கினாபாலுவில் தற்போது 1,331 பலாவுகள்  (pala uh) வாழ்கின்றனர், ஆனால் இந்த முன்னோடித் திட்டம் சாலையோரக் குழந்தைகளுக்கானது மட்டுமே. முழு பலாவ் மக்களையும் இலக்காகக் கொள்ளாது என்று அவர் தெரிவித்தார். கோத்த கினாபாலு சிட்டி ஹால் (DBKK) சாலையோர குழந்தைகளின் பிரச்சனையை தீர்க்க நிறைய முயற்சி செய்துள்ளதாக  ஆபீதின் கூறினார்.

அதே நேரத்தில், குழந்தைகளுக்கு பணம் கொடுத்து, அவர்களின் பொருட்களை வாங்குதல் அல்லது தங்களின் கார்களுக்கு மளிகைப் பொருட்களை எடுத்துச் செல்வது போன்ற பணிகளைச் செய்ய பணம் கொடுத்து அவர்களை ஊக்குவிக்க வேண்டாம் என்று ஆபீதின் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here