பண்டார் பூச்சோங் ஜெயாவில் உள்ள தொழிற்சாலையில் தீப்பரவல் ; 5 ஊழியர்கள் பாதுகாப்பாக மீட்பு

பூச்சோங், நவம்பர் 28 :

இங்குள்ள பண்டார் பூச்சோங் ஜெயாவில் உள்ள தாமான் பெரிண்டஸ்ட்ரியான் பூச்சோங்கில் உள்ள ஒரு தொழிற்சாலையில், நேற்று இரவு ஏற்பட்ட தீபரவலில் சிக்கிக்கொண்ட 5 தொழிற்சாலை ஊழியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குனர் நோரஸாம் காமிஸ் கூறுகையில், இரவு 11.20 மணியளவில் இந்த சம்பவம் குறித்து அவரது துறைக்கு அழைப்பு வந்ததாகவும் உடனே பூச்சோங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம், சுபாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம், தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் பிரிவு 7 மற்றும் 41 உறுப்பினர்களைக் கொண்ட கோம்பாக் தன்னார்வ தீயணைப்புப் படை ஆகியவற்றின் மூன்று இயந்திரங்கள் தீயணைப்பு நடவடிக்கைக்காக சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் கூறினார்.

“14 முதல் 44 வயதுடைய ஐந்து ஊழியர்களையும் மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உறுப்பினர்களால் வெற்றிகரமாக மீட்கப்பட்டனர். இந்த தீ விபத்தில் குறித்த தொழிற்சாலை கட்டிடத்தில் உள்ள நான்கு அலுவலக அலகுகள் 70 விழுக்காடு எரிந்து நாசமாயின” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

மேலும், சம்பவத்திற்கான காரணம் மற்றும் மொத்த இழப்பு இன்னும் விசாரணையில் உள்ளது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here